சுமார் 65 முதல் 70வயது மதிக்கத்தக்க கதையின் நாயகன் கதிரேச குமார், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக இருந்து வருகிறார். பணிமுடிந்து தனது இரு சக்கர மிதிவண்டியில் வீடு திரும்பும் போது, அவ்வழியாக ஒரு கார் ஒன்று வருகிறது.

அது கிராமபுற ரோடு என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். அந்த காரில் கர்ப்பிணி பெண் ஒருவரோடு சேர்த்து 5 பேர் அந்த காரில் வருகிறார்கள். வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார் அந்த கார் டிரைவர்.
ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் கதிரேச குமார். காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி கதிரேச குமாரிடம் ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்.
எதற்கும் செவி சாய்க்காத கதிரேச குமார், நடுவழியிலேயே சென்று கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள்.

அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
எதற்காக அந்த காரை தடுக்கிறார்.?? அந்த காருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்.? என்பதே படத்தின் மீதிக் கதை.