பயமறியா பிரம்மை திரைப்படத்தின் விமர்சனம் Bayamariya Brammai Review

69 எம் எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில்  ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

ஒரு கொலை குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கதை

ஒளிப்பதிவாள கள் நந்தா & பிரவின் படம் முழுக்க இரவு நேரத்தில் படமாக்கி இருக்கிறார்கள் இருட்டு திகில் திடுக்.. திடுக்..

நந்தா . பிரவீண் இருவரும் இருள் சார்ந்த கதை என்பதால் நிறைய மெனக்கெட்டு உள்ளார்கள்

இருவருக்கும் வாழ்த்துக்கள்

இத்திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை நமக்கு தருகிறது. புதிய முயற்சியை உணர்த்துகிறது

வித்தியாசமான தமிழ் சினிமாவில் நாம் இருக்கிறோம் என்று உணர்த்தும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் சார்!

பெண் கதைக் களத்தில் சாய் பிரியங்கா

 

தமிழில் ‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ‘

இவரது நடிப்பு ‘பயமறியா பிரம்மை யில் செம மிரட்டலாக ஆக இருக்கிறது காரில் வரும் அந்த நால்வரையும் அடித்து துவம்சம் செய்யும் போது ஆக்ரோஷம்

படம் முழுக்க ஜெகதீஷ், கபிலன் இந்த இருவரை சுற்றியே கதை நகருகிறது சிறைக்குள்ளே இருக்கும் கொலைகாரன் வெளியே அவனைப் பற்றி புத்தகம் எழுதிய எழுத்தாளர் இவர்களின் உரையாடல் மூலமே படம் நகர்கிறது தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகள் அபூர்வமாகவே இருக்கும்

மாறன் கதாபாத்திரத்தில் ஒருவர் ஜெகதீஷை எப்படி ஆட்டி படைக்கிறார் அதில் ஜான் விஜய் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்

குரு சோமசுந்தரம் போலீசை அடித்து நொறுக்கும் காட்சி விசில் சத்தம் கேட்கிறது ஹரிஸ் ஊத்தமன் ஜட்டியோடு தன் மனைவியிடம் வந்து நான் உத்தமன் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதாடும் போது அவரது மனைவி திவ்யா பாரதி அவரை விட்டுப் பிரிகிறார் அந்த காட்சியும் ரசிக்க வைக்கிறது

கதிர் என்ற கதாபாத்திரத்தில் விசுவாந்த்

குரு சோமசுந்தரத்தின் துப்பாக்கியால் உயிர் இழக்கிறார் இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் சிங்கிள் டேக்கில் நடித்துள்ள அந்த காட்சி யும்படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்

இப் படத்தில் புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அமைதியான பேச்சு ஆழமான நடிப்பு என அசத்தலாக நடித்திருக்கிறார்

25 வருடத்தில் 96 கொலைகள் அதுவும் கலையாக நினைத்து செய்தது தன் தரப்பில் நியாயம் என்று வாதாடுகிறார்

அவர் கதாபாத்திரமும் அவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

படத்திற்கான இசையை கே என் கிற ..கிருஷ்ண குமார் வழங்கியுள்ளார். இசை அமைதியாக ஆழமாக வயலின் இசைகளின் இசையோடு ஒரு திகிலை ஏற்படுத்துகிறது வழக்கமான இசையாக இல்லாமல் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்த ருக்கிறது இசை.

ஜான் விஜய், வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது ஹரிஷ் உத்தமன்,சாய் பிரியங்கா ரூத், இவர்கள் நடிப்பில் எதார்த்தமான நடிப்பு திவ்யா கணேஷ், இவர் வரும் காட்சிகள் குறைவு என்றால் நியாயத்தின் பக்கம் இருக்கிறார் தன் கணவன் குற்றவாளியோ என்று சந்தேகப்படும் இவர் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைப்பு இருக்கிறது

: இப்படத்தின் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் வினோத் சாகர் கபிலன் என்ற எழுத்தாளராக வந்து ஜெகதீசன் கொலைகள் செய்தது நியாயமா என்று கேட்கிறார் இவர் ஒன்று சொல்ல அவர் ஒன்று சொல்ல எதிர்மறையாகவே போய்க்கொண்டிருக்கிறது உரையாடல் வினோத் சாகர் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்

மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு குழப்பமாக திரை கதை இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம் Bayamariya Brammai Review