அஞ்சி நடுங்கிட என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது

“அஞ்சி நடுங்கிட”

ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது .

கதை சுருக்கம்: தாய் ,தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை .இது ஒரு வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படம் .

இப்படத்தில் கதாநாயகனாக மாறன் நடிக்கிறார் .மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கதை,திரைக்கதை,வசனம்-மாறன்

இயக்கம்- M. ஸ்ரீதர்

ஒளிப்பதிவு – A .T ஜாய்

இசை – டாக்டர் செல்லையா பாண்டியன்

பாடல்கள் – தொல்காப்பியன் ,மாறன்

எடிட்டிங் – லெனின் சந்திரசேகர்

நடனம் – பவர் சிவா

ஸ்டண்ட் – காட்டு ராஜா

கலை – ராமலிங்கம்

மக்கள் தொடர்பு – செல்வரகு

Comments (0)
Add Comment